search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் நடவடிக்கை"

    • வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    • கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வளைதலங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

    இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல அச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ் -அப் மூலமாக புதிய குழுக்களை ஆரம்பித்து, மாநில அளவில் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்ட ங்களில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
    • காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக இறந்து போன மாணவியின் தந்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ நாகப்படினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது பக்கத்து வீடான முனுசாமி என்பவர் குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்தார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வீடியோ என்று தெரியவருகிறது . இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவி ஸ்ரீமதியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்யான செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி மைதானத்தில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 52 பள்ளிகளைச் சார்ந்த சுமார் 250 வாகனங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சுமார் 15 வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவி சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் பிரபாகர், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் சரவணபவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, உதவி அலுவலர் பிரபாகர், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் பத்மநாபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட கலெக்டர்ர மண சரஸ்வதி தெரிவித்ததாவது:

    வாகனங்களின் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 15 குறைபாடு உடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும், மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்கும் வகையில் ஆபரேசன் கந்துவட்டி என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
    • தேனி மாவட்டத்தில் கந்துவட்டி புகார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

    தேனி :

    தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்கும் வகையில் ஆபரேசன் கந்துவட்டி என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    அதன்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே கந்து வட்டி கொடுமையை தடுக்கும் பொருட்டு கந்துவட்டி தொழில் செய்வோர் மீது நிலுவையில் உள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்ப–ட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம். அந்த மனுக்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக திருப்பாதிரி ப்புலியூர் லாரன்ஸ் சாலை இருந்து வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக திருப்பாதிரி ப்புலியூர் லாரன்ஸ் சாலை இருந்து வருகின்றது. இங்கு பஸ் நிலையம், பூ மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடை, நகைக்கடை, பிரசித்தி பெற்ற கோவில்கள், ரயில் நிலையம் போன்றவற்றை இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் இச்சாலையில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் லாரன்ஸ் சாலையில் அதிக அளவில் கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக அதிகளவில் சென்று வருவதாலும், பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை வரிசையில் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்திக் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் சார்பில் லாரன்ஸ் அப்பகுதியில் தற்போது ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது‌. இதன்மூலம் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் லாரன்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து வாகன ஓட்டிகளும் போலீசார் அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய வாகனத்தை நிறுத்தி விட்டு செல்ல வேண்டும். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×